ராஜகீய பண்டித, சாஸ்திரபதி, வணக்கத்துக்குரிய ஹந்தானே தம்மகவேசி தேரர் அமரபுர ஸ்ரீ சம்புத்த சாசனோதய சங்க சபையின் அனுநாயக்க பதவியினால் கௌரவிக்கப்பட்டார்

மொரவக்க அரதி ஆன்மீக ஆசிரமத்தின் ஸ்தாபகரும், பியகம தம்ம விகாரை மத்திய நிலையம், கேகாலை கொடிகல தம்மனிகேதன பௌத்த மத்திய நிலையம், சிங்ஹாரகம ஸ்ரீ தம்மரதன தர்ம ஆராய்ச்சி பிக்கு பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றின் விகாராதிபதியுமான ராஜகீய பண்டித, சாஸ்திரபதி, கௌரவ ஹந்தானே தம்மகவேசி மகாதேரர், மகா விகாரவம்சிக ஸ்ரீ லங்கா அமரபுர ஸ்ரீ சம்புத்த சாசனோதய சங்க சபையின் அனுநாயக்க பதவியினால் கௌரவிக்கப்பட்டார்.

இவருக்குப் புதிய பதவிக்கான அக்தப்பத்திரம் வழங்கும் விழா, ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் சாசனோதய சங்க சபையின் மகாநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கலாநிதி வஸ்கடுவே மகிந்தவம்ச தேரர் உள்ளிட்ட கௌரவ மகா சங்கத்தினரின் தலைமையில், ஒக்டோபர் 27ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்திலுள்ள லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ராஜகீய பண்டித, சாஸ்திரபதி, கௌரவ ஹந்தானே தம்மகவேசி மகாதேரருக்குப் புதிய அனுநாயக்க பதவிக்கான அதிகாரப்பத்திரத்தைக் கையளித்தார். இவரது புதிய பதவிக்கான பதவிப் பிரமாணப் பத்திரத்தை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கம்கெதர திசாநாயக்க வழங்கினார்.

இந்தக் கௌரவ பூசை விழாவில், இலங்கைக்கான மியன்மார் தூதுவர் Daw Malar Than Hteik உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் சாகரிகா அதாவுத உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், அங்கத்தவ சபையினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு