ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு தகுதிவாய்ந்த அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் 20 (4) (ஆ) பிரிவின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் ருஹுணு பல்கலைகழகத்தின் நிர்வாக நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு 25.11.2024 இன்று பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்குப் பதிலாக இன்று முதல் மூத்த பேராசிரியர் ஆர்.எம்.யு.எஸ்.கே. ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஊடகப் பிரிவு

Download Release