வணக்கத்துக்குரிய வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர் மகாநாயக்க பதவியேற்பு

பேலியகொடை கங்காராம விகாராதிபதி, அக்கமஹா சத்தம்மஜோதிகதஜ, தம்மசேனாபதி, பாஷாந்தர விஷாரத, அதிவணக்கத்துக்குரிய பண்டித வல்பொல விமலஞான மகாநாயக்க தேரர், மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் ஆரியவன்ச சத்தம்மயுக்திக பிரிவின் மகாநாயக்க பதவியேற்பு நிகழ்வும், அதற்கான ஸ்ரீ சன்னஸ்பத்திர வழங்கும் நிகழ்வும் 06 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்பில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மகாவிஹார வம்சிக இலங்கை அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க, அதிவணக்கத்துக்குரிய கரகொடை உயன்கொட மைத்ரீ மூர்த்தி மகாநாயக்க தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மகாநாயக்க பதவியுயர்வுக்கான ஸ்ரீ சன்னஸ்பத்திரத்தைப் பிரதமர் அவர்கள் விமலஞான மகாநாயக்க தேரரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் முப்பிரிவுகளையும் சார்ந்த மகா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க உள்ளிட்ட அதிதிகள் மற்றும் பௌத்த பக்த பெருமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு