பெண்களின் பிரதிநிதித்துவம் 50% இருக்க வேண்டும், யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள். - பிரதமர் யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு

நாங்கள் முன்வைக்கும் வரவுசெலவுத்திட்டம் ஏழைகளுக்கான வரவு செலவுத்திட்டம்

"எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% ஆக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து பெண் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்ப தயாராகுங்கள் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேசத்தில் (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய,

2024 ஆம் ஆண்டு இந்த நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியமான ஆண்டாகும், இரண்டு சந்தர்ப்பங்களில் மக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டின் வரலாற்றை மாற்றினர். முதன்முறையாக, இந்த நாட்டின் விவசாய சமூகத்திலிருந்து ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்தனர். அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் நீங்கள் பாராளுமன்றத்தை மாற்றினீர்கள்.

அதனால்தான் ஆளும் கட்சியில் அரசியல் குடும்பப் பின்னணி இல்லாதவர்கள், சாதாரண மக்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்கள், அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், பல்வேறு தொழில்களைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

நீங்கள் கவனமாக சிந்தித்து எங்களை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தீர்கள். அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பதன் மூலம், நாட்டில் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது. அதற்கு இந்த அரசு அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் பொறுப்புகூறவேண்டியவர்கள்.

நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். நம்பிக்கை இருக்க வேண்டும். அந்த சூழ்நிலையை உருவாக்கவே நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

வரலாற்றில் முதன்முறையாக அதிக எண்ணிக்கையிலான பெண்கள் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். 22 பெண் எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களில் 20 பேர் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள். பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 50% இருக்க வேண்டும். யாழ்.மாவட்டத்தில் இருந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறச்செய்ய தயாராகுங்கள்.

மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்று, அதற்காக நாடு முழுவதும் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு