பூட்டானில் நடைபெற்ற 2026 விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் முறைமைகளின் உலகளாவிய தலைவர் பிரதமரைச் சந்தித்தார்

பூட்டானில் நடைபெற்ற 2026 விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டையொட்டி (Global Conscious Food Systems Summit – GCFSS), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) உணவு மற்றும் விவசாயப் பொருட்கள் முறைமைகளின் உலகளாவிய தலைவரான ஆண்ட்ரூ போவர்னிக் அவர்கள், 2026 செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவை மேலும் பலப்படுத்தக்கூடிய வாய்ப்புகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், குறிப்பாக விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல், உணவுப் பாதுகாப்பைப் பலப்படுத்துதல், மற்றும் நிலையான, மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடிய உணவு முறைமைகளை மேம்படுத்துவதற்காகத் தொழில்நுட்பமும் அறிவும் பரிமாறிக்கொள்ளும் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பிரதமர், ஐக்கிய நாடுகளின் முன்னாள் பொதுச் செயலாளரும் (2007–2016), பான் கீ மூன் அமைப்பின் (Ban Ki-moon Foundation) ஸ்தாபகரும் பணிப்பாளர் சபை உறுப்பினரும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பேரவையின் முன்னாள் தலைவரும் சபை உறுப்பினருமான திரு. பான் கீ மூன் அவர்களையும் சந்தித்தார்.

காலநிலை மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்கும் திறன், நிலையான விவசாய நடைமுறைகள், உணவுப் பாதுகாப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, மற்றும் பெண்களைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட, இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தொடர்பில் சர்வதேசப் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவது குறித்து இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு