இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026 நவம்பர் 03ஆம் திகதி அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு (CHOGM) சமாந்தரமாக, கென்யாவின் உப ஜனாதிபதி பேராசிரியர் கித்துரே கிந்திகியைச் (Prof. Kithure Kindiki) சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, இலங்கைக்கும் கென்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் குறித்து இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். அத்துடன், விவசாயம், வர்த்தகம், முதலீடு மற்றும் காலநிலை நிதியளிப்பு ஆகிய துறைகளை மையமாகக் கொண்டு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துதல், காலநிலை மாற்றத்தால் எழும் சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பைப் பலப்படுத்துதல், காலநிலை நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியன தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.
மேலும், இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதுடன், இரு நாடுகளுக்கும் முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்குவது குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.
பிரதமர் ஊடகப் பிரிவு