பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி அவர்களின் தலைமையில் செப்டம்பர் 18ஆம் திகதி அலரி மாளிகையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் முதலாவது வேலைத்திட்டமாக இந்தச் சமூக நலன்புரிச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த இரத்த தான முகாமில் பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் பாதுகாப்புப் பிரிவைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் இரத்த தானம் வழங்குவதில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு