பிரதமருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கும் இடையில் ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, கல்வித் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதன் அவசியத்தை பிரதமர்  மேலும் >>

அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்திற்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு

அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகம் Sam Mostyn AC அவர்கள், 2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தார்.

இச்சந்திப்பானது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான சந்த மேலும் >>

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய பிள்ளைகளை தொழிற்கல்விக்கு வழிநடத்துவதுமே கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கடற்றொழில் , விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்முயற்சியாளர்களை உருவாக்கும் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்ளுங்கள் - பேராயர் மல்கம் கார்டினல் ரஞ்சித்

பிள்ளைகளிடம் விழுமியங்களை வளர்ப்பதும், பாடசாலை கல்வியை இடையில் நிறுத்திய  மேலும் >>

அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்திற்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்

பிரதமருக்கும் அகில இலங்கை சாசனாரக்ஷக பலமண்டலத்தின் தலைவர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய தும்புல்லே சீலக்கந்த தலைமைத் தேரர் உள்ளிட்ட தேரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இதன்போது, பௌத்த அறநெறிப் பாடசாலைகள் தற்போது எதிர்கொள்ளும் ச மேலும் >>

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலின் வருடாந்த ஆடிவேல் திருவிழாவையொட்டி இன்று (07) அலரி மாளிகைக்கு முன்பாக வீதி உலா சென்ற தேர்ப் பவனியில் கலந்துகொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கோயில் தேருக்கு அர்ச்சனைத் தட்டு வழங்கி வழிபாடுகளில் ஈடுபட்டார்.

நாதஸ்வர இசை முழங்க, பிரதமரை வேல் ரதத்திற்கு அருகாமையில் அழைத்துச் சென்று, அவரிடம் அர்ச்சனைத் தட்டை பெற்றுக்கொண்டனர். பின்னர், அலரி மாளிகைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த விசேட பீடத்திற்கு அழைத்துச் சென்று, பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆசீர்வாதம் வேண்டி, விசேட பூஜை ரமேஷ்  மேலும் >>

நாடு முழுவதும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு பங்களிப்பது மகாசங்கத்தினரின் தேசிய பொறுப்பாகும்.... - அமரபுர, ராமண்ய மகா நிகாயக்களின் தேரர்கள் பிரதமரிடம் தெரிவிப்பு

"விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அல்லது செயலாளர் இவ்வளவு சிறந்த விளக்கத்துடன் விடயங்களை முன்வைத்ததை நாம் இதற்கு முன்னர் பார்த்ததில்லை..."

"மகா சங்கத்தினராக அந்த அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டுகிறோம்..."

புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விளக்கமளிக்கும் விசேட  மேலும் >>

பதவிக்காலம் நிறைவடைந்து விடைபெறும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரதமரைச் சந்தித்தார்

பதவிக்காலம் முடிந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை ஆகஸ்ட் 4 அன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

உயர் ஸ்தானிகரை வரவேற்ற பிரதமர், தனது பதவிக் காலத்தில் இருதரப்பு உறவுகளை மேலும் >>

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில், நாகவிகாரை மற்றும் யாழ். நூலகத்திற்கு பிரதமர் விஜயம்

புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வடமாகாண அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

இன்று (03) முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோயில், யாழ். ஸ்ரீ நாகவிகாரை மற்றும் யாழ். நூலகம் ஆகிய இடங்களுக மேலும் >>

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்த ஒரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை. கல்வி மற்றும் தொழிற் துறைகள் இரண்டிலும் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

புதிய கல்வி சீர்திருத்தத்தில் எந்தவொரு பிள்ளையும் தோல்வியடைய வாய்ப்பில்லை என்றும், கல்வி மற்றும் தொழிற் துறைகளில் உயர் கல்வியைத் தொடர பிள்ளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும்

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார மேலும் >>

போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அல்லது மாணவர் அரசியலுக்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் வன்முறை அல்லது பகிடிவதையில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியாது - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என்றும். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மேலும் >>

புதிய கல்விச் சீர்திருத்தம் ஜனாதிபதி அனுரவினுடையதோ அல்லது பிரதமர் ஹரிணியினுடையதோ அல்ல. - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைவரும் முன்வைக்கும் தெளிவான கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம், பிள்ளைகளுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டிய பொறுப்பே இது.

புதிய கல்விச் சீர்திருத்தம் என்பது கல்வி அமைச்சினுடையதோ, ஜனாதிபதி அனுரவினுடையதோ  மேலும் >>

’நீதி தேடும் பெண்கள் - நமது கடந்த காலமும் எதிர்காலமும்’ கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமர்

இலங்கையின் பெண் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கொழும்பு 07, சர்வதேச பெண்கள் சங்க மண்டபத்தில் நடைபெற்ற "நீதி தேடும் பெண்கள் - நமது கடந்த காலமும் எதிர்காலமும்" கண்காட்சியைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்கள் ஆகஸ்ட் 01 ஆம் திகதி பார்வையிட்டார்.

இந்தக் கண்காட்சி மேலும் >>

இன்றைய சமூகத்திற்கு அத்தியாவசியமான இளம் தலைவிகளை உருவாக்கும் ஆற்றல் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திற்கு உள்ளது: - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

இன்றைய சமூகத்தில் பெண் தலைமைத்துவத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் திறன் இலங்கை பெண் வழிகாட்டிச் சங்கத்திடம் உள்ளது என்று கூறினார்.

உலகின் மிகப்பெரிய பெண்களுக்கான தன்னார்வ அமைப்பின் ஓர மேலும் >>

புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்

அஸ்கிரி, மல்வத்து இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமருக்கு வேண்டுகோள்

புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத் மேலும் >>

யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்குப் புதிய அலுவலர் குழு நியமனம்

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்புக்கான (யுனெஸ்கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், கௌரவ பிரதமரின் பங்கேற்புடன் ஜூலை 29 அன்று பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.

கல்வி, உயர்கல்வி மற்றும் த மேலும் >>

பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் இந்நாட்டுக்கான நெதர்லாந்து தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய கௌரவ பொனி ஹர்பக் (Bonnie Harbach) அவர்கள் தனது பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், இன்று (28) பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.

இருதரப்பு உற மேலும் >>

எமது சமையற்கலைஞர்கள் வெறும் சமையல் செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் மரபுரிமையின் தூதர்களும் ஆவர். அவர்கள் பரிமாறும் ஒவ்வொரு உணவிலும், மணமூட்டும் பொருள், இடம் மற்றும் விருந்தோம்பலின் கதையை எடுத்துச் செல்கிறார்கள். – பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பில் உள்ள சின்னமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்ற SIRHA BOCUSE D’OR இலங்கை 2025 விருது வழங்கும் விழாவில் உரையாற்றும்போது இக்கருத்துகளைத் தெரிவித்தார்.

பிரதமர் மேலும் கூறியதாவது:

"இது வெறும் உணவைப் பற்றியது அல்ல. இது சிறப்பைப் பற்றியது, மரபுரிமை பற்றியது, அடையாளம் பற்றியது. இல மேலும் >>

சிங்கள இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையின் பொற்காலத்தைக் குறிக்கும் கோட்டே, கடந்த காலத்திற்கான ஒரு விடயம் மட்டுமல்ல. இது அழகிய ஈரநிலங்கள், பல்வேறு பறவைகள் மற்றும் உலகின் மிகச் சில தலைநகரங்களுக்கு மட்டுமே உரித்தான அரிய சூழல் சமநிலையைக் கொண்ட ஒரு நகரமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

“கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பணம்" (LAUNCH OF THE KINGDOM OF KOTTE TOURISM INITIATIVE) மற்றும் ’கோட்டே பசுமை சுற்றுலா’ (Kotte Green Tourism) என்ற கருப்பொருளின் கீழ் ஜூலை 27 ஆம் திகதி பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற கோட்டே இராச்சிய சுற்றுலாப் பாதை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உர மேலும் >>