பிரதம அமைச்சர் அலுவலகம்

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ கடமை அலுவல்களைச் செயற்படுத்துகின்ற பிரதம அமைச்சர் அலுவலகம், அரச கொள்கைகளுக்கு ஏற்ப பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்குத் தேவையான வழிகாட்டல், ஒருங்கிணைப்பு மற்றும் தலைமைத்துவத்தினை வழங்குகிறது.

அத்துடன், காலத்தின் சவால்களுக்கு மத்தியில், அச்சமின்றி, திடசங்கற்பத்துடன் அந்த சவால்களுக்குத் துரிதமான தீர்வுகளை வழங்குவதற்கும், மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கும் கடினமாக காலப்பகுதிகளில் அவர்களின் பக்கம் நின்று குறித்த எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான தலைமைத்துவத்தைப் பிரதம அமைச்சர் அலுவலகம் வழங்குகிறது. மேலும், நாட்டின் அபிவிருத்திப் பணியை அடைந்துகொள்வதற்கு அவசியமான கொள்கைகளை வகுத்தல் மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறையொன்று ஊடாக நிலைபேறான முறையில் நாட்டின் அபிவிருத்தி இலக்குகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசியமான பங்களிப்பு, வழிகாட்டல், சிறப்பான ஒருங்கிணைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய அந்நியோன்யத் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன் இராஜதந்திர அலுவல்கள் சம்பந்தமான பங்களிப்புக்களை வழங்குவதும் பிரதம அமைச்சர் அலுவலகத்தினால் நிதமும் மேற்கொள்ளப்படுகிறது.

தூரநோக்கு

“சுயாதீன, இறைமையுள்ள மற்றும் சௌபாக்கியமிக்கதோர் இலங்கை”

செயற்பணி

“இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பொருட்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் பொருட்டும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடையே சிறப்பான ஒருங்கிணைப்பினைப் பேணி நல்லாட்சிமிக்க சிறந்ததோர் அரச பொறிமுறையொன்றுக்கான தலைமைத்துவத்தை வழங்குதல்”

Economics or entrepreneurship must go beyond monetary values and be tied to humanity — Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya

The Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya stated that despite the fact that societal tendencies give priority to the monetary value, economics and entrepreneurship should be disciplines rooted in humanity, and the concept of a “care economy” serves as a good example of this approach.

The Prime Minister made these remarks while participating in a program held today (18) at the Ministry of Education to inform officials about the development of modules for financial literacy and entrepreneurship, which are included as subjects under the new educational reforms.

Chairman of the Securities and Exchange Commission of Sri Lanka, Senior Professor Harendra Dissabandara, shared his insights on the current state of financial literacy in Sri Lanka and the way forward and the Chairman of the Colombo Stock Exchange, Mr. Dimuthu Abeysekara, expressed his views on the financial literacy activities in the country.

Further addressing the event, Minister of Education, Higher Education, and Vocational Education, Prime Minister Dr. Harini Amarasuriya stated:

We clearly come to see that your support and bless have forwarded for the new education reforms we are trying to implement. As the Ministry of Education, it brings forward a great strength and these reforms are more than just curriculum changes.

What we need is a developed society, not just economically, but spiritually and ethically as well. Wealth is not just about money.

In that sense, the transformation we are trying to bring about through education is deeply significant.

The theft, corruption, and fraud we see in today’s society are not committed by people lacking subject knowledge but by those who know the subject very well. That is why it has been so hard to address. Therefore, we must learn financial literacy and entrepreneurship together with human values, to develop them as ethical disciplines. What we need are entrepreneurs who love the environment, society, and have compassion for one another.

The Prime Minister further emphasized the importance of considering what state society would fall into if women were only engaged in financially valuable work.

Addressing this event the Deputy Minister of Labour and Economic Development, Professor Anil Jayantha Fernando, added:

Incorporating financial literacy into school education is extremely important. Many people fall victim to pyramid-like financial scams due to a lack of proper understanding. Therefore, the public must have a strong grasp of financial literacy. It is often those with high financial literacy who carry out financial fraud. Along with subject knowledge, we need to empower society with values to manage this situation

The event was attended by the Secretary to the Ministry of Education, Mr. Nalaka Kaluwawa; officials from the Ministry of Finance; the Securities and Exchange Commission of Sri Lanka; the Colombo Stock Exchange; and other institutional representatives.

Prime Minister’s Media Division

உண்மையான தகவல்களுடன் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

கொழும்பு, ஜூலை 17, 2025 – சமூகத்திற்கு உண்மையான தகவல்களைக் கொண்டு செல்லும் வகையில், புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து நடைபெறும் உரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் விமர்சனங்கள் மிகவும் முக்கியமானவை என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு, இன்று (ஜூலை 17) மேல் மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து அனைவரும் பெரும் அக்கறை கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்பட்டுள்ள உரையாடல்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. கல்விச் சீர்திருத்தம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே பலரும் பல்வேறு கருத்துகள், கருத்துரைகள் மற்றும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இது வரவேற்கத்தக்க நிலைமையே. இதன் மூலமே எம்மால் சிறந்த நிலையை அடைய முடியும்," என்றார்.

"நாம் அரசாங்கம் என்ற வகையில், கொள்கைகளை உருவாக்கும் இடத்திலிருந்தே கல்வி மீது பெரும் கவனம் செலுத்துவோம் என வாக்குறுதி அளித்தே ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். எமது கொள்கைப் பிரகடனத்திலும், எமது அரசியல் மேடைகளிலும் நாம் இதைக் கூறியுள்ளோம். இது இன்று நேற்று ஆரம்பித்த விடயமல்ல. நாம் அனைவரும் இந்த நாட்டின் அபிவிருத்தி இலக்குகளுக்காகவே குரல் கொடுத்தோம். ஆயினும், அபிவிருத்தி இலக்குகளை அடைவதை மாத்திரம் இந்த சமூகம் எதிர்பார்க்கவில்லை. கல்வியிலும் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"ஆகையால், உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் நாம் எதிர்பார்ப்பது, குறுகிய அறிவை அளிக்கும் புத்தகம், பாடம், பாடத்திட்டம் என்பவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தனிநபர் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட நபர்களை உருவாக்குவதல்ல. நாம் எதனை உருவாக்க முயற்சிக்கிறோம்? பரந்த மனமுடைய, சுதந்திர சிந்தனையுடைய, உலகத்தை பரந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய, தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே எமது இலக்காகும்."

"பாட வகுப்பை மாத்திரம் இலக்காகக் கொண்டதல்ல இந்த சீர்திருத்தம். இது கட்டமைப்பு மாற்றம் வரை ஐந்து தூண்கள் மீது நிற்கக்கூடிய வகையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றது. அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி எதையும் அறியாது ஜனரஞ்சகமான முடிவுகளை எடுத்ததன் விளைவாகவே இன்று கல்வி இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றது," என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.

புதிய சீர்திருத்தத்தால் ஏற்படும் முதன்மை மாற்றம், மாணவர்கள் வேலை உலகில் நுழையக்கூடிய வகையில் அவர்களின் திறன்களை வளர்ப்பதாகும். "நாம் பத்தாம் வகுப்பிலிருந்தே அதனை அறிமுகப்படுத்துகிறோம். சிலர் இந்தத் திருத்தத்தைத் தவறான இடத்தில் பிடித்துக் கொண்டு பல்வேறு அபாண்டக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள், பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். சரியான ஆய்வுகளைச் செய்து இதுபற்றிய விமர்சனங்களை செய்யவும், கருத்துகளை முன்வைக்கவும், உரையாடல்களை உருவாக்குவதற்கும், நாம் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்," என்று அவர் வலியுறுத்தினார்.

கல்வித்துறை சார்ந்த அனைவரும் புதிய சீர்திருத்தத்தைப் புரிந்துகொண்டு சரியான விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றும், "நம் நாட்டின் குழந்தைகளுக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பைப் பெற்றுக் கொடுங்கள். பல பிரிவுகளாகப் பிரிந்து இதனைச் சாதிக்க இயலாது. நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும்," என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

குழந்தைகளின் நலனுக்காக புதிய கல்விச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவருக்கும் இடையிலான உரையாடல் உருவாகுவது அவசியமாகும் என்றும் பிரதமர் கலாநிதி அமரசூரிய தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்விப் பிரதி அமைச்சர் கலாநிதி மதுர சேனேவிரத்ன, தொழில்நுட்பக் கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணாரச்சி, சஞ்சீவ ரணசிங்க, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேல் மாகாண பிரதமச் செயலாளர் பிரதீப் புஷ்பகுமார, தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், மேல் மாகாண கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோர் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு, அழகியல் மற்றும் தொழில்சார் பாடங்கள் கட்டாயம்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டுவிட்டதாக மேற்கொள்ளப்படும் பொய்யான பிரச்சாரங்கள் குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். கல்வியையும் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேல் மாகாண கல்வித் துறை சார்ந்த உத்தியோகத்தர்களிடையே புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்று (ஜூலை 17) மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் அழகியல், வரலாறு ஆகிய பாடங்களோடு தொழில்சார் பாடமும் கட்டாயமாகக் கற்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார். எனினும், இந்த தேசிய வேலைத்திட்டம் குறித்த சரியான ஆய்வை மேற்கொள்ளாத சிலர், வரலாறு மற்றும் அழகியல் கல்வி நீக்கப்பட்டுவிட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்கண்ட பாடங்கள் தொடர்பாகப் பாட நிபுணர்களுடன் பல நாட்கள் கலந்துரையாடி, அனைத்து மாணவர்களிடமும் வரலாறு குறித்த அறிவையும், மனிதநேயம் குறித்த குணாதிசயங்களையும் வளர்க்க உதவும் அழகியல் கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையிலேயே இந்த கல்விச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பிரதமர் விளக்கமளித்தார்.

"நாம் அரசியல் செய்வோம், ஆனால் கல்வியையும் குழந்தைகளையும் அதன் பால் ஈர்க்காமல் இருப்போம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் இந்தப் பாடங்களை எவ்வாறு கற்க வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறியிருப்பதாகவும், தனது துறைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாத தரமான சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் புரிந்துகொண்டே இந்தச் சீர்திருத்தத்தைச் செய்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். ஆகவே, புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய உண்மையான விடயங்களை அறிந்துகொண்ட அனைவரும் உண்மை நிலவரத்தைச் சமூகத்திற்கு எடுத்துச் செல்லுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.

கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர சேனேவிரத்ன, தொழில்சார் கல்வி இணை அமைச்சர் நலின் ஹேவகே, தொழிலாளர் இணை அமைச்சர் மஹிந்த ஜயசிங்ஹ, மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுஃப், பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் நிபுணஆரச்சி, சஞ்சீவ ரணசிங்ஹ, ருவன் மாபலகம, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார் ஆகியோரும், தேசிய கல்வி நிறுவனம், பரீட்சைத் திணைக்களம், மேல் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

அரச மற்றும் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் அனைத்துப் பாடசாலைகளுக்குமான 2025 ஆம் ஆண்டுக்குரிய சீருடைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம்

2025 ஆம் ஆண்டுக்கான 5,171 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாடசாலை சீருடைக்குத் தேவையான சீருடைத் தொகையையும், சீன அரசின் அன்பளிப்பாக வழங்கியதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, ஜூலை 16 ஆம் திகதி பத்தரமுல்லை கல்வி அமைச்சில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் பங்கேற்பில் நடைபெற்றது.

அப்பொழுது 2025 ஆம் ஆண்டிற்குத் தேவையான மொத்த சீருடைத் தேவையும் வழங்கப்பட்டு முடிந்ததை அறிவிப்பதற்கான சான்றிதழ் பரிமாற்றம் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையே இடம்பெற்றது.

ஏற்கனவே, 2026 ஆம் ஆண்டிற்குத் தேவையான பாடசாலை சீருடைத் தொகையையும் அன்பளிப்பாகப் பெற்றுத் தருமாறு சீனாவிடம் தமது கோரிக்கையை வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக மக்கள் சீனக் குடியரசின் இலங்கை சீனத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர்,

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எனது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கமே ஆகும்.

2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்ததோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் எமது நாட்டின் ஒட்டுமொத்தப் பாடசாலை மாணவர்களுக்கும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இலங்கைக்கு மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.

2026 ஆம் ஆண்டிற்காகவும் சீன அரசின் இந்த தொடர்ச்சியான உதவியை எமக்குப் பெற்றுத் தருமாறு ஏற்கனவே எமது அரசு சீன அரசாங்கத்திடம் கோரியிருக்கிறது.

இத்தருணத்தில் நான் எமது நாட்டின் பிள்ளைகளின் சார்பாகவும் பெற்றோர்களின் சார்பாகவும் சீன அரசுக்கும், மக்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong அவர்கள்,

“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.

அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அம்மையார் கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இலங்கை சீனத் தூதரக அதிகாரிகளும், கல்வி அமைச்சின் உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

கல்வியின் டிஜிட்டல்மயமாக்கலுக்கு TikTok-கின் ஆதரவு

இன்று (ஜூலை 16) பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில், வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

டிஜிட்டல் கல்வி தொடர்பான அறிவை வழங்குவதற்கான வழிமுறைகள், ஆராய்ச்சி, மற்றும் பாடத்திட்டத்திற்குத் தேவையான மாற்றங்களை உள்ளடக்குவதன் முக்கியத்துவம் குறித்து TikTok பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். அத்துடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது மற்றும் TikTok மூலம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

கல்வித் துறையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சீர்திருத்தங்களுடன் இத்தகைய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல்மயமாக்கல் செயல்முறையை விரைவில் நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.

இந்தக் கலந்துரையாடலில் தெற்காசிய TikTok நிறுவனத்தின் அரசு உறவுகள் தலைவர் மற்றும் தெற்காசிய மக்கள் விவகாரத் தலைவர் ஃபெர்டூஸ் அல் மொட்டகின் (Ferdous Al Mottakin), பிரதமரின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு

சூரிய சக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்திற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு ஜூலை 16, 2025 அன்று கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

"பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் ISA பிராந்தியக் குழுவிற்கும் இடையிலான உள்ளூர் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, சூரிய சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் "சூரிய சக்திக்கான போராட்டம்" எனும் திட்டம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடையும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்த மாநாடு புதிய பிராந்தியப் பங்காளிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகமானது, சூரிய வலுசக்தி புத்தகத்திற்கான பிரதான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.

சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பல்வகை சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் உள்ளிட்ட விசேட சூரிய சக்தி தாக்க புத்தாக்கக் கண்காட்சியின் ஆரம்ப விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டார்.

இலங்கையின் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா, ISA தலைமை இயக்குநர் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் மற்றும் 124 நாடுகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு