பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.

கல்வி விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப விடயதான அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (31) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

பாடசாலை விளையாட்டு பயிற்சியாளர்கள் சங்கத்தில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது அவர்கள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அவற்றை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் இங்கு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நலினி கொஹொவல, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் விஷாகா அபேரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு