மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

அறியாமை இருள் அகன்று ஞானத்தின் ஒளி ஏற்றப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த சிவராத்திரி தினத்தில் சிவ வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இலங்கை வாழ் இந்துக்கள் அனைத்து இனங்கள், மதங்கள் மற்றும் கலாசாரங்களுடன் சுமுகமான உறவைப் பேணும் நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை கொண்டுள்ளனர். அந்த மரபுகளோடு இயைந்ததாக எமது வாழ்வொழுங்கைப் பேணி சிவராத்திரி தினத்தில் அனைத்து வாழ்விலும் ஒளியேற்றுவோம். அதேபோன்று, இந்த மகா சிவராத்திரியின் ஒளியைக் கொண்டு தற்போதைய சூழ்நிலையில் எம்மை மீளக் கட்டியெழுப்புவதன் மூலம், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒளிபாய்ச்சுவோம்.

மகா சிவராத்திரி விழாவைக் கொண்டாடும் உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் எதிர்பார்ப்புகளும் நல்லெண்ணங்களும் ஈடேற எனது பிரார்த்தனைகள்.

தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 மார்ச் 08ஆந் திகதி