பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரவின் 100வது பிறந்தநாள் விழா பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் 2023.12.10 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, கொழும்பு பல்கலைக்கழகத்தின் ’ஸ்டான்லி விஜேசுந்தர AI நிலையம் அடையாள ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் கடித உரையும் வெளியிடப்பட்டது.

நிகழ்வின் பிரதான உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர், நாரஹேன்பிட்டி அபயராமயவின் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, பேராசிரியர் ஜி. எல். பீரிஸ், ராஜித சேனாரத்ன, யதாமினி குணவர்தன, ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட, கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன, தபால் மா அதிபர் ஆர். சத்குமார, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, ஷாலித விஜேசுந்தர, வைத்தியர் ரொஹான் விஜேசுந்தர, ருச்சினி விஜேசுந்தர, லக்மினி விஜேசுந்தர, தனு விஜேசுந்தர உள்ளிட்ட ஸ்டான்லி விஜேசுந்தரவின் குடும்ப உறவினர்கள், பல்கலைக்கழக உபவேந்தர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் கல்விமான்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கொழும்பு, ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள சிலையும் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு