கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்பத் துறைக்கு பொறுப்பான அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (31) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் தமது சேவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நளினி கொஹவல, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் விஷாகா அபேரத்ன, இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு