இந்திய கடற்படைத் தளபதி, அட்மிரல் ஆர். ஹரி குமார், பிரதமர் நரேந்திர மோடியின் பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (SAGAR) என்ற எண்ணக்கருவின் கீழ் இலங்கை கடற்படையுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கான இந்தியாவின் முழுமையான உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் புதன்கிழமை (டிசம்பர் 14) பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.