இரத்மலானை செவிப்புலன் வலுவற்றோர் பாடசாலையில் செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்ற பிள்ளைகளுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன...

பிரதமர் தினேஷ் குணவர்தன அண்மையில் இரத்மலானை செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்றோருக்கான பாடசாலை பிள்ளைகளின் தேவைகள் மற்றும் வசதிகள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வித்து, பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டார்.

ஒவ்வொரு வருடமும் இப்பாடசாலை பிள்ளைகளுக்காக தனது நேரத்தை ஒதுக்குவதை பிரதமர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இரத்மலானையில் உள்ள இலங்கை செவிப்புலன், விழிப்புலன் மற்றும் பேச்சுத்திறன் வலுவற்றோர் பாடசாலை விசேட தேவையுடைய பிள்ளைகளின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது பாடசாலையாகும்.

பிரதமர் ஊடகப் பிரிவு