’தர்ம தீபானி’ பிரதமர் தினேஷ் குணவர்தன களனி ரஜமஹா விகாரையில் பொடா நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து வழிபட்டார்.

அலரி மாளிகையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ’தர்மதீபனி’ நோன்மதி தின நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து சமயக் கிரியைகளில் ஈடுபட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன களணி ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி கொல்லுபிடியே மஹிந்த சங்கரகித நாயக்க தேரரின் ஆசிர்வாதங்களை பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து கொள்ளுப்பிட்டி வழுகாராமயவிற்கு ஊர்வலமாக வந்த பக்தர்கள், வரலாற்று சிறப்பு மிக்க ரத்மலானை பரம தம்ம சேதிய பிரிவேனா விகாராதிபதி மகா விகார வங்சிக ஷ்யாமோபாலி மஹா நிகாய ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் பிரதிப் பதிவாளர் உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் பிரதித் தலைவர் கலாநிதி சங்கைக்குரிய மா இடிபே விமலசார நாயக தேரரினால் நிகழ்த்தப்பட்ட சமய உரையை செவிமடுத்தனர்.

அமைச்சர்களான மனுஷ்ய நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன், கொழும்பு மாவட்ட செயலாளர், பிரதமர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

’தர்ம தீபனி’ நேரடித் தொலைக்காட்சி ஒளிபரப்பு மெலிபன் நிறுவனம் அனுசரணை