பிரதமர் அரச தாதிய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் அரச தாதிய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று பிரதமர் அலுவலகத்தில் நேற்று (31) இடம்பெற்றது.

தாதியர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் பிரத்தியேக செயலாளர் வைத்தியர் அசங்க விக்கிரமசிங்க, அரச தாதிய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய, செயலாளர் அஜித் ரத்நாயக்க, உப தலைவர் நாலக ஹெட்டியாராச்சி, உப செயலாளர்கள் சமீர பத்திரன, ரேணு ஜயசிங்க, அமைப்பாளர் பேர்ணி சில்வா, செயற்குழு உறுப்பினர்களான சந்தியா குமாரி, நதீ ராஜபக்ஷ மற்றும் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு