இலங்கைக்கான துருக்கி தூதுவர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான துருக்கி தூதுவர் Semih Lütfü Turgut 2024.10.25 பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். துருக்கியில் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இதன்போது தனது அனுதாபத்தை தூதுவர் Turgut விடம் தெரிவித்தார். அத்துடன் இந்த கலந்துரையாடலின் போது துருக்கி அரசிற்கான இலங்கையின் ஒத்துழைப்பை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக காணப்படும் நட்புறவின் பெறுமதி குறித்தும் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பில் துருக்கி தூதரக அலுவலகத்தின் பிரதம செயலாளர் மற்றும் தூதுக் குழுவின் பிரதானி Merve Gozde Otlu, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் ஐரோப்பிய, வட அமெரிக்க பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஷோபினி.கே.குணசேகர உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு.