அனுதாபச்செய்தி

முதிர்ந்த அரசியல்வாதியான பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சம்பந்தன் அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த அவர், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும், விவேகமான மக்கள் பிரதிநிதியாகவும் பதித்துச் சென்ற தடம் மிகவும் பெறுமதியானதாகும்.

தமிழ்த் தேசிய அரசியலில் தீர்க்கமான ஒருவராக இருந்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும், தமிழ் மக்களின் பொதுத் தலைவராகவும் தான் சார்ந்த கொள்கைக்காக எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படுபவராகவும் இருந்தார்.

பாராளுமன்ற நடைமுறைகள் குறித்து அவருக்கு நல்ல புரிதல் இருந்தது. பல தசாப்தங்களாக அவர் சமூகமயப்படுத்திய கருத்துக்கள் ஏராளம் உள்ளன. எமக்கிடையில் எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், ஒரு சக பாராளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் அவர் செயற்பட்ட விதம் குறித்து நான் மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.

அவரது மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சகோதர மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் அவர்களுக்கு மோட்சம் வேண்டி பிரார்த்திக்கிறேன்.



தினேஷ் குணவர்தன (பா.உ)
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஜூலை 01 திங்கட்கிழமை

Download Release