அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (24) மாலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
வைத்தியர்கள் மற்றும் சுகாதார கட்டமைப்பு முகம்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார். அத்துடன் சிறந்த சுகாதார சேவையை முன்னெடுத்துச் செல்வதற்கென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ தென்னகோன், செயலாளர் பிரபாத் சுகததாச மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுச் சபை பிரதிநிதிகள் பலரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
பிரதமர் ஊடக பிரிவு