பிரதமர் சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (2024.03.12) சிலாபம் கார்மேல் மாதா ஆலயத்தில் சிலாபம் மறை மாவட்டத்தின் ஆயர் கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகையை சந்தித்தார்.

கலாநிதி டொன் விமலசிறி ஜயசூரிய ஆண்டகை கடந்த டிசம்பர் மாதம் 06 ஆந் திகதி சிலாபம் மறை மாவட்டத்தின் நான்காவது ஆயராக பதவியேற்றார்.

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு