இலங்கை வலைப்பந்து அணிக்கு பிரதமரின் வாழ்த்து.

இம்முறை இந்தியாவில் நடைபெறும் ஆசிய வலைப்பந்து செம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவுள்ள அணி 14ம் திகதி பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தது.

அணியின் வீராங்கனைகளுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், அணியின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இம்முறை அணியின் தலைவியாக துலங்கி வன்னிதிலக செயற்படுவதுடன், பயிற்சியாளர் தீபி நாலிகா ப்ரசாதி, முகாமையாளராக செயற்படும் பத்மிணி ஹொரனகே, ஆசிய வலைப்பந்து சங்கத்தின் தலைவர் லக்ஷ்மி விக்டோரியா, அணியின் வைத்தியராக செயற்படும் வைத்தியர் லால் ஏக்கநாயக்க, மனோஜ் தர்ஷண ஆகியோர் குழுவில் இணைந்துள்ளனர்.

முதற்தடவையாக 14 ஆசிய நாடுகள் இம்முறை தொடரில் பங்கேற்கின்றன. இம்முறை தொடரின் ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் 17ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், ஒக்டோபர் 18ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை இந்தியாவின் பெங்களுர் நகரில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

துலங்கி வன்னிதிலக்க அணிக்கு தலைமை தாங்குவதுடன் வீராங்கணைகளான ஹசிதா மென்டிஸ், ரஷ்மி திவ்யாஞ்சலீ, கயாங்கலீ அமரவங்ச, திஷலா அல்கம, ஷானிகா பெரேரா, கயானி திஸாநாயக்க, காயத்ரி, கௌசல்யா, சுசீமா பண்டார, சவினி ரொட்றிகா, மல்மி ஹெட்டியாராச்சி, ச்சலனி நிஷா ஆகியோர் அணியில் உள்ளடங்குகின்றனர்.

பிரதமர் ஊடக பிரிவு