கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் தேசிய கெரம் அணிக்கு பிரதமரின் வாழ்த்து.

இம்முறை ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் கெரம் உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வீர, வீராங்கனைகள் உள்ளிட்ட இலங்கை தேசிய கெரம் அணி இன்றைய தினம் (18) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரனி அமரசூரியவை சந்தித்தது.

2024 நவம்பர் மாதம் 10ஆம் திகதியிலிருந்து 17ஆம் திகதி வரை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சென் பிரான்சிஸ்கோவில் இடம்பெறும் ஆறாவது கெரம் உலக கிண்ணத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியில் முகாமையாளருடன் 8 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

ஶ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தினால் இந்த சுற்றுப் பயணத்திற்கென அனுசரணையாக 5 மில்லியன் ரூபா நிதி வழங்கப்படுவதுடன் அதனை கையளிப்பதன் அடையாளமாக அதன் பொருளாலர் சுஜீவ கொடலியத்தவும் இந்த சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தார்.

அணி முகாமையாளராக ரணில் அபேசிங்க செயற்படவுள்ளதுடன் மொஹம்மட் ஷஹீட், அனாஸ் அஹமட், கவீன் நிம்நெத் பீரீஸ், தினேஷ் நிஷாந்த பெர்னான்டோ ஆகிய வீரர்களும் ஜோசப் ரோஷிதா வடுகே, ஹிருஷி மல்ஷானி பீரிஸ், தருஷி ஹிமஹன்சிகா வீரசேகர. தஸ்மிலா காவின்தி ஆகிய வீராங்கனைகளும் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.

அணியினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர், வீர வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

பிரதமர் ஊடக பிரிவு