இலங்கை அமரபுர ஷ்வேஜின் நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹாபண்டித சங்கைக்குரிய இங்குருவத்தே பியனந்த தேரருக்கு, மியன்மார் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அக்கமஹாபண்டித விருது வழங்கும் நிகழ்வு, பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், கந்துபொட சியனே விபஸ்ஸனா தியான நிலையத்தில் 2023.12.0 2 அன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாயகதேரர்கள் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, மியன்மார் தூதுவர் யு. ஹன் து (Han Thu) பாராளுமன்ற உறுப்பினர்களான யதாமினி குணவர்தன, ஹர்ஷன ராஜகருணா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.