பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், முன்னாள் பேராயர் ஒஸ்வல்ட் கோமிஸ் அருட்தந்தை அவர்களை இன்று (2022.12.14) களனி புனித அன்னாள் முதியோர் இல்ல வளாகத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் அருட்தந்தை விக்டர் ஜயமான்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.