பிரதமர் அவர்களது ஹஜ் பெருநாள் (அதுல் அல்ஹா) வாழ்த்துச் செய்தி

ஆன்மிக விழுமியங்களால் சமூகத்தை மேலும் வளப்படுத்துவோம்.

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் சமய வழிபாடுகளை நிறைவேற்றி தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகிறார்கள்.

அனைவரும் ஒன்றுபட்டு தமது சமயக் கிரியைகளை நிறைவேற்றி மகிழ்வது பழங்காலத்திலிருந்தே இடம்பெற்று வருகின்ற ஒன்றாகும். இந்த வகையில் இஸ்லாமியர்களும் ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்டு சமூக நல்லிணக்கம் பற்றிய செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கின்றனர். சமத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதே ஹஜ்ஜின் முக்கிய நோக்கமாகும்

அதன் ஆன்மிக விழுமியங்களால் இலங்கை சமூகத்தை மென்மேலும் வளம்பெறச் செய்து, எல்லா வகையான பேதங்களையும் மறந்து நட்புறவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ இந்த ஹஜ் பெருநாளில் உறுதிபூணுவோம்.


தினேஷ் குணவர்தன (பா.உ.),
பிரதமர்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு

2024 ஜூன் மாதம் 17ஆந் திகதி