பிரதமரின் செயலாளர் மற்றும் சீனாவின் ஹெனான் மாகாணக் குழுவின் உபதலைவருக்கிடையி லான சந்திப்பு.

பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் ஹபுதன்த்ரி மற்றும் மக்கள் சீனக் குடியரசின் ஹெனான் மாகாணக் ஆலோசனை குழுவின் உபதலைவர் திரு. Liu Jiongtian தலைமையிலான குழுவினருக்கிடையிலான சந்திப்பு நேற்று (05) காலை பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் ஹெனான் மாகாணத்திற்கிடையிலான வரலாற்று பிணைப்புகள் பட்டு வீதிவழியே பயணிக்கும் தொன்மையான கலாசார தொடர்புகளோடு விருத்தியடைந்ததாக பிரதமரின் செயலாளர் இங்கு தெரிவித்தார்.

ஹெனான் மாகாணத்தின் நவீன விவசாய தொழிநுட்பம், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தி, மின்னியக்க வாகனங்கள் மற்றும் கையடக்க தொலைபேசி உற்பத்திக் கைத்தொழில் மற்றும் ஏனைய தொழிநுட்ப புத்தாக்க உற்பத்திகள் மூலம் பிரதேசத்தின் வளமான பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கும் விதம் குறித்து Liu Jiongtian அவர்கள் பிரதமரின் செயலாளருக்கு விளக்கமளித்தார்.

தொழில் துறை, தொழிநுட்பக் கல்வி மற்றும் உயர்கல்வியினூடாகவும் சுற்றுலா, கலாசார பரிமாற்று நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பொருளாதார ஒத்துழைப்புகள் மூலமும் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை விருத்தி செய்து கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் ஹெனான் மாகாண கலாசார விழுமியங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு Ren Wei, ஹெனான் மாகாண வெளிநாட்டு அலுவல்கள் காரியாலயத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு. Ai Fan, ஆசிய மற்றும் ஆபிரிக்க அலுவல்கள் தொடர்பான பிரதி பணிப்பாளர் திரு. Guo Hua ஆகியோரும் பிரதமரின் மேலதிக செயலாளர் திரு ஹர்ஷ விஜேவர்தன அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு