களனி வித்யாலங்கார பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்ட “சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம்”

பிரதமர் தினேஷ் குணவர்தன நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது 170 மில்லியன் ரூபா செலவில் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் களனி வித்தியலங்கார பிரிவேனாவில் சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபம் சகல வசதிகளையும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டது.

பின்னர், பல சம்பந்தப்பட்ட நிறுவன சிக்கல்கள் காரணமாக, இந்த நிலையத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. இதனை மீண்டும் செயற்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் அண்மையில் (2024.03.14) களனி வித்தியாலங்கார பிரிவேனாவில் களனி வித்தியாலங்கார பரிவேனாதிபதி வெலமிடியாவே ஞானரத்ன தேரரின் ஆலோசனையின் பேரில் பிரதமர் தலைமையில் களனி வித்தியாலங்கார பிரிவெனாவில் இடம்பெற்றது.

இதன் போது குறுகிய காலத்திற்குள், இந்த நிலையத்தை குறைபாடுகள் மற்றும் தேவைகளை நிறைவேற்றி செயற்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட நிறுவனங்களான நகர அபிவிருத்தி அமைச்சு, புத்த சாசன அமைச்சு, மத்திய பொறியியல் ஆலோசனைப் பணியகம் மற்றும் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் ஆகியன உடன்பாட்டுக்கு வந்தன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயக்கொடி, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு