அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய லொத்தர் சீட்டு பிரதமரிடம் கையளிப்பு

அபிவிருத்தி லொத்தர் சபையின் புதிய லொத்தரான “சுபிரி தன சம்பத”, 09.11.2023 அன்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் /பிரதம நிறைவேற்று அதிகாரி அஜித் குணரத்ன நாரகல, பொது முகாமையாளர் அனுர ஜயரத்ன மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்களான விஜித சோமரத்ன, சானக தொடங்கொட ஆகியோர் பங்கேற்றனர்.