பிரதமர் தினேஷ் குணவர்தன கிரீஸ் பிரதமருக்கு வாழ்த்து..

பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தற்போதைய அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், தனிப்பட்ட முறையிலும், மீண்டும் பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக இன்று (2023.12.27) வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பிவைத்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஆழமான, நீண்டகால நாகரீக உறவுகளையும் வலுவான நட்புறவினையும் மேலும் மேம்படுத்துவதற்கு கிரீஸ் நாட்டின் புதிய பிரதமருடன் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ஊடகப் பிரிவு