சீனாவின் மிகப்பெரிய நிர்மாணத்துறை நிறுவனமான CCCC, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பெனி, மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான பெய்ஜிங்கில் உள்ள ஹுவாவீ ஆகியவற்றுடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார்.

CCCC தலைவர் வாங் ஹைஹுவாய், CHEC நிறுவனத்தின் தலைவர் பே யின்சான் மற்றும் ஹுவாவீ நிறுவனத்தின் தலைவர் ஆகியோருடன் கூட்டுத் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவர் ஆராய்ந்தார்.

ஹுவாவீ தொழிநுட்பப் பூங்கா மற்றும் சூழல் பாதுகாப்பு பூங்காவையும் பிரதமர் பார்வையிட்டார்.

பிரதமர் ஊடகப் பிரிவு