பெய்ஜிங் தலைநகரில் சிங்கக் கொடி ஏற்றி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அமோக வரவேறபு

பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார்...

பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (மார்ச் 25) சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார். சீனாவின் வெளியுறவுத்துறை நிறைவேற்று துணை அமைச்சர் சன் வெய்டாங் (Sun Weidong) மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பதிற்கடமை தூதுவர் கே.கே. யோகானந்தன் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவின் முன்னணி வருடாந்த சர்வதேச மாநாடான போவா மாநாட்டின் பிரதம அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று மாலை (24.03.2024) சீனாவின் பெய்ஜிங் பயணமானார்.

பிரதமர் ஊடகப் பிரிவு