சர்வதேச வெள்ளை பிரம்பு தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி

அக்டோபர் 15 அன்று சர்வதேச வெள்ளைக் பிரம்பு தினத்தில், பார்வையற்றவர்களின் குறிப்பிடத்தக்க வலிமை, சுதந்திரம் மற்றும் தாங்கும் சக்தியை பாராட்டுவோம்

வெள்ளை பிரம்பு கௌரவம் மற்றும் நம்பிக்கையுடன் உலகில் உலாவ அவர்களுக்குரிய சுதந்திரத்தை அடையாளப்படுத்துகிறது. அணுகல், ஆதரவு மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவை மையமாக இருக்கும் ஒரு ஒருங்கிணைந்த சமுதாயத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும் தேவையும் வெள்ளை பிரம்பு அனைவருக்கும் தெளிவாகத் தெரிவிக்கிறது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பெருமைமிக்க குடிமக்களாக சமமான மற்றும் நியாயமான வாய்ப்புகளையும் உரிமைகளையும் அனுபவிப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் உலக வெள்ளைக் பிரம்பு தினம் உருவானது.

பொறுப்புக்கூறும் அரசாங்கமாக, சந்தர்ப்பங்களை மேம்படுத்துதல் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் அவர்களின் நன்மைக்காக எங்களின் சேவைகளை பலப்படுத்தல் ஊடாக பார்வை குறைபாடு உள்ளவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அதற்காக அனைத்து தரப்பினருடனும் நெருக்கமாக பணியாற்றுவோம்.

இதற்காக எங்களுடன் இணைந்து செயல்பட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.

கலாநிதி ஹரினி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

15 அக்டோபர் 2024 அன்று