எதிர்பாராத அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

பரிந்துரைக்கப்பட்ட அல்லது எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போன பிள்ளைகளுக்கு, இது இறுதிக் கல்வித் தடைதாண்டல் அல்ல என்பதால், அவர்கள் முயற்சியுடனும் உறுதியுடனும் தங்கள் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான சக்தியும் தைரியமும் கிடைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கான சிறந்த வழிகளில் வழிகாட்ட நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம்.

தினேஷ் குணவர்தன
பிரதமர்