UNICEF இலங்கை பிரதிநிதிகள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தனர்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று (01) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் கல்வியை மேம்படுத்துதல், சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தல், பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குதல் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டன.

இச்சந்திப்பில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன, யுனிசெப் இலங்கை சிறுவர் பாதுகாப்பு மற்றும் கல்வித் துறை தலைவர் தியோனா அஸ்லானிஷ்விலி, பெண்கள், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் மஹேசன், வெளிவிவகார அமைச்சில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் கே. தயானி மெண்டிஸ், கல்வி அமைச்சின் பாடத்திட்டம் மற்றும் ஆரம்பக்கல்வி மேலதிக செயலாளர், பி.சி.கே. பிரிசியல ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு