’மிகப்பெரும் நில அபகரிப்பு’ என்ற போலிச் செய்தி குறித்த தெளிவுபடுத்தல்.

திரு. சமுதித சமரவிக்ரம,
Truth With Chamuditha
யூ டியூப் அலைவரிசை தலைவர்,
இல. 39,
பல்கலைக்கழக வீதி
கட்டுபெத்த, மொரட்டுவ.

’மிகப்பெரும் நில அபகரிப்பு’ என்ற போலிச் செய்தி குறித்த தெளிவுபடுத்தல்.

’மிகப்பெரும் நில அபகரிப்பு’ என்ற பெயரில் CNB – Truth With Chamuditha News Brief யூ டியூப் அலைவரிசையில் 2023.09.19 அன்று ஒளிபரப்பான நேர்காணலில் பிரதமர் தினேஷ் குணவர்தன தொடர்பான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.

நேர்காணலின் ஊடாக, கிரியெல்ல நெதுன் ரஜமஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ஹதபாங்கொட மஹிந்த தேரர், பிரதமரின் உறவினர் என இட்டுக்கட்டப்பட்ட கருத்து முற்றிலும் பொய்யானது.

பல தசாப்தங்களாக விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் அழிக்கப்படுவதை எதிர்த்தும், விகாரைகள் மற்றும் புனிதத் தலங்கள் தொடர்பான பிரச்சனைகளில் ஒரு மக்கள் பிரதிநிதியாகவும் அதற்கு வெளியில் இருந்தும் சாசனத்தின் மீதான பற்றுடன் பணியாற்றிய பிரதமர், அதற்கு மேலதிகமாக புனித பூமிகள் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்த போது, அதிகளவு புனித பூமிகளை வர்த்தமானியில் பிரசுரித்தல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல், விகாரைகளின் பிரச்சினைகள் தொடர்பாக தலையீடுகளை செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து, சங்கைக்குரிய மகாசங்கத்தினர்களுடன் தொடர்ந்து சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வந்துள்ளார். இவை அனைத்தும் சாசனத்தின் மேன்மைக்காக மட்டுமே என்பதை இந்த போலிச் செய்திகளை உருவாக்குபவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

மகா சங்கத்தினர்களையும் தேசிய தலைவர்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படும் மற்றுமொரு திட்டமிட்ட போலிப் பிரச்சாரமான ’மிகப்பெரிய நில அபகரிப்பு’ என்ற இந்த நேர்காணலில் பிரதமர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புரம்பானவை என்பதால் இந்த செய்தியை நான் முற்றாக நிராகரிக்கிறேன்.

லலித் ரோஹன லியனகே
பிரதமரின் ஊடகச் செயலாளர்
0714445999

Download Release