தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் 03.06.2024 அன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோசமான காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கவும், முப்படை மற்றும் சிவில் கண்காணிப்புப் படையை ஈடுபடுத்தி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்களின் முழுமையான பங்களிப்புடன், சேதமடைந்த பொது உட்கட்டமைப்பு முறைமைகளை உடனடியாக திருத்தியமைப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவையின் தீர்மானங்கள் பின்வருமாறு.

"இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களின் விளைவாக, நாட்டின் பல மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு, மரங்கள் முறிந்து விழல், வெள்ளம் மற்றும் பலத்த சேதங்கள் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தற்காலிகமாக ஆதரவற்ற நிலையில் உள்ளன. " எனவே, முப்படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படையின் சேவையை பெற்று, சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சுக்களின் முழுமையான பங்களிப்புடன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான உடனடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், சேதமடைந்த பொதுக் கட்டமைப்புகளை மீளமைப்பதற்கும் பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.

பிரதமர் ஊடகப் பிரிவு