நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு, வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் கட்டாயத் தேவைகளாகும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இந்நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பின்னணியில், நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்வதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும் பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவையாகும் எனப் பி மேலும் >>

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடன் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உண்மையான தலைமைத்துவம் என்பது பதவிகளோ அல்லது அதிகாரமோ அல்ல, பொறுப்புணர்வுடனும் பரஸ்பர பரிவுடனும் பிறரின் நலனுக்காகச் செயலாற்றுவதே ஆகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் பெண் பிள்ளைகளையும் இளம் பெண்களையும் வலுவூட்டும் ஒரு முதன்மை தன்னார்வ நி மேலும் >>

இலங்கை முஸ்லிம் பெண்கள் சங்கத்தின் ஒன்பது தசாப்தகால சேவையைப் பாராட்டிய பிரதமர், பெண்களையும், பிள்ளைகளையும் உள்ளடக்கிய அபிவிருத்திக்காக அதிக முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

இலங்கைக்காக ஆற்றிய 90 ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக இலங்கை முஸ்信லிம் பெண்கள் சங்கத்திற்கு (Ceylon Moor Ladies Union - CMLU) தனது பாராட்டுகளைத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இச்சங்கமானது தலைமுறைகள் கடந்து எண்ணற்ற உயிர்களை மாற்றியமைத்த கருணை, பெண் வலுவூட்டல் மற்றும் சமூகத் தலை மேலும் >>

தாய்லாந்தின் மகா சங்க நாயக்க தேரர்கள் பிரதமரைச் சந்தித்தனர்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 2026 ஜூலை 18, அலரி மாளிகையில் வைத்து, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மகா சங்க நாயக்க தேரர்கள் குழுவினரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இந்தச் சந்திப்பில், அதிவணக்கத்திற்குரிய ப்ரா தம்மவஜிரபண்யாசார்ய மஹாதேர மேலும் >>

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது

2026 ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற, இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையினால் (Ceylon Chamber of Women Entrepreneurs - CCWE) ஏற்பாடு செய்யப்பட்ட CCWE Fashion Week & International Summit 2026 நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

"Threads of Inclusion – Woven from Every Walk of Life" எனும் தலைப்பின் கீழ் 2026 ஜூலை 16  மேலும் >>

தெருவிலங்குகளின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

செல்லப்பிராணிகளை வளர்ப்பதென்பது நமது கலாசாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் அதேவேளையில், தெருக்களில் வசிக்கும் விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும் நம் அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜூலை 17 ஆம் திகதி, பண்டாரநாயக்க சர்வத மேலும் >>

இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கு மனித மூலதனத்தில் முதலீடு செய்யுமாறு மனித வள நிபுணர்கள் சங்கத்தின் (AHRP) 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் அழைப்பு

மனித வள நிபுணர்கள் சங்கத்தின் (AHRP) 25ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கையின் நீண்டகால பொருளாதார மாற்றத்தை முன்னெடுப்பதில் மனித மூலதன அபிவிருத்தி, தொடர்ச்சியான கற்றல் மற்றும் கூட்டுத் தலைமைத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத மேலும் >>

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர் பிரதமரைச் சந்தித்து விடைபெற்றார்

இலங்கைக்கான சவூதி அரேபிய இராச்சியத்தின் தூதுவர், மேதகு Khalid Hamoud Nasser Alkahtani அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து விடைபெறும் முகமாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை 2026 ஜூலை 16ஆம் திகதி அலரி மாளிகையில் சந்தித்தார்.

இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர், இலங்கைக்கும் சவூதி அ மேலும் >>

முன்பள்ளித் துறைசார்ந்த எவரையும் புறக்கணிக்காது அவர்களின் தொழில்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களது தொழில்சார் கௌரவத்தைப் பாதுகாத்து அதனை ஒரு மூடிய சேவையாக மாற்றி அமைப்பதே எமது நோக்கமாகும்

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

முறையற்ற ஆரம்பப் பருவக் கல்வி முறையை மாற்றி, இத்துறையின் தரம் ம மேலும் >>

புதிய கடற்படைத் தளபதி, பிரதமரைச் சந்தித்தார்!

இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்றுக்கொண்ட வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்கள், ஜூலை 16 அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.

புதிய கடற்படைத் தளபதி தனது பதவியேற்பின் பின்னர், பிரதமரைச் சந்தித்த முதலாவது உத்தியோகபூர்வ மேலும் >>

கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நாடு திரும்பினார்!

கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் அவர்களின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 16 காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மீண்டும மேலும் >>

பிரதமர் கட்டார் அரச குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்!

காலஞ்சென்ற முன்னாள் (Father Amir) ஷேக் ஹமட் பின் கலீபா அல்-தானி (His Highness Sheikh Hamad bin Khalifa Al-Thani) அவர்களின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜூலை 15ஆம் திகதி அல் வஜ்பா அரண்மனைக்கு (Al Wajba Palac மேலும் >>

கட்டார் நாட்டின் தற்போதைய அமீர் அவர்களைச் சந்தித்த பிரதமர், முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்!

முன்னாள் அமீர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காகக் கட்டார் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஜூலை 15, தோஹாவிலுள்ள லுஸைல் அரண்மனைக்கு (Lusail Palace) சென்றார்.

அங்கு கட்டார் நாட்டின் உள்துறை அமைச்சர் Qatar’s Minister of Interior is His Excellency Sheikh Khalifa bin Hamad bin Khalifa Al Thani அவர்களி மேலும் >>

இந்தோனேசியத் தூதுவர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதுவர் Dewi Gustina Tobing அவர்கள், 2026 ஜூலை 14ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சினேகபூர்வமான சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நிலவ மேலும் >>

கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்காக பிரதமர் கட்டார் நோக்கிப் பயணம்.

’Father Emir’ என கௌரவிக்கப்பட்ட கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவு குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த கட்டார் நாட்டிற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காக மேலும் >>

ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றியிருக்கிறோம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சமமான பிரவேசத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சம வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும மேலும் >>

அனர்த்த நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பணிகள் மிக முன்னேற்றகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன! - பிரதமர் ஹரிணி அமரசூரிய

அனர்த்த நிவாரணங்களுக்காக நன்கொடையாகக் கிடைத்த அனைத்து நிதியும்ம் திறைசேரியின் கீழ் பாதுகாப்பாக உள்ளது.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகள் மற்றும் நிவாரணங்களை வழங்கும் பணிகள் மிகுந்த முன்னேற்றத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தே மேலும் >>