தேசிய தொழிற்பாட்டு அறை குழு தீர்மானங்கள் - பிரதமர் அலுவலகம்

மாத்தளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற கட்டிடத்தின் நிர்மாண வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை...

கண்டி மாநகர கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் காலம் டிசம்பர் 31 வரை நீடிப்பு...

மாத்தளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற கட்டிட நிர்மாணப் பணிகளை உடனடியாக மீள ஆரம்பிக்க பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையிலான தேசிய தொழிற்பாட்டு அறை குழு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்ந்து இடைநிறுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகளை கருத்திற் கொண்டு அரசுக்கு ஏற்படக்கூடிய நிதி இழப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகரசபை கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தின் நிறைவு திகதியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு திட்ட முகாமைத்துவ பிரிவை மூடிவிட்டு எஞ்சிய பணிகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ள அமைச்சரவை முன்னர் தீர்மானித்துள்ளது.

பல்வேறு பிரச்சினைகளால் இடைநிறுவத்தப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ள இத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பான விரிவான அறிக்கையை நீர் வழங்கல் சபை குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கு மாதாந்தம் நூறு மில்லியன் ரூபாவை ஏழு மாதங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அதனை அமைச்சு ஒதுக்கீட்டு வரவு செலவுத்திட்டத்தின் பிரகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதமர் ஊடகப் பிரிவு