இதுவரை கால துன்பங்களில் இருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்ல உறுதி கொள்வோம் - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ’புதியதோர் கிராமம் - புதியதோர் நாடு’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தாண்டின் முதல் நிகழ்ச்சித்திட்டத்தை இன்று (16) கொட்டாவ ஸ்ரீ தம்மகித்திகாராம விகாரையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

“இந்த சந்தர்ப்பத்தில், இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரின் ஆசியும் வழிகாட்டுதலும் முக்கியமானது. பௌத்த சாசனத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

நான் உங்களது மக்கள் பிரதிநிதியாக கடந்த நாற்பது ஆண்டுகளாக பணியாற்றிய காலத்தில் முடியுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெற்று அவர்களின் வழிகாட்டலின் பேரிலேயே செயல்பட்டேன். மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களே தாய்நாட்டிற்கும், சாசனத்திற்கும், பிரதேசத்திற்கும் செய்யக்கூடிய அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் பலத்தை எனக்கு வழங்கியது.

” புத்தாண்டு பாரம்பரியங்கள் கிராமம் கிராமமாக நினைவுகூரப்படும் இந்த விசேட காலப்பகுதியில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த சம்பிரதாயங்கள் தேசத்தின் ஒற்றுமையை அடையாளப்படுத்துகின்றன. நாடு முழுவதும் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இந்த சமய சம்பிரதாயங்கள் நடைபெறும் வேயைில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரே தேசமாக துன்பங்களிலிருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்ல உறுதி கொள்வோம். "

விகாரை வளாகத்தில் தென்னை மரக் கன்றொன்றை நாட்டிய பிரதமர், மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகளை வழங்கிவைத்தார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், சியம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர், சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார தேரர், விகாரை நிர்வாக அதிகாரி லேலவல தம்மகுசல தேரர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி உள்ளிட்ட அதிதிகளும் பிரதேசவாசிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு