உமா ஓயா திட்டத்தின் இறுதிக்கட்டத்தை பிரதமர் பார்வையிட்டார்

தேசிய மின்சக்தி கட்டைப்பிற்கு 120 மெகாவோட் மின்சாரத்தை ஒருங்கிணைத்தல் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீரைப் பெற்றுக்கொடுத்தல் என்பனவற்றிற்கு உதவும் ’உமா ஓயா திட்டம்’ 2023.03.18ஆந் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களது அவதானத்திற்கு உட்படுத்தப்பட்டது.

ஈரான் தூதுவர் Hashem Ashjazadeh, ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம்.முசம்மில், இராஜாங்க அமைச்சர்களான ஷசீந்திர ராஜபக்ஷ, ஜகத் புஷ்பகுமார, சாமர சம்பத், பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷன தெனிபிட்டிய, குமாரசிறி ரத்னாயக்க, கயாஷான் நவநந்தன, யதாமினி குணவர்தன மற்றும் திட்ட முகாமையாளர் உள்ளிட்ட பல உத்தியோகத்தர்கள் இச்சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்.