பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 2024.03.14 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், இலங்கை கிராம உத்தியோகத்தர் சேவைக்காக முன்மொழியப்பட்டுள்ள சேவை பிரமாணக் குறிப்பு, சம்பள முரண்பாடுகள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களின் தொழில் கௌரவத்தை பாதுகாத்தல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு