76வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஸ்ரீ தர்மகீர்த்தியாராமவில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (04) நிகழ்வொன்று இடம்பெற்றது.

1948 பெப்ரவரி 4 இல் சுதந்திரம் பெற்ற பின்னர், அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா இந்த விகாரைக்குச் சென்று சமய வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்த சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன் இந்த வருட கொண்டாட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்து கொண்ட நிகழ்வு தொடர்பான புகைப்படங்களே இவையாகும்.

மகாசங்கத்தினர், இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.