ஹகுரன்கெத்த, மதன்வெல ரஜமஹாவிகாரையின் சிலை திறப்பு விழா மற்றும் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் பிரதிஷ்டை செய்தல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்...

ஹகுரன்கெத்த, மாதன்வல ரஜமஹா விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட தூபி திறப்பு விழா மற்றும் அம்பாறை, லாகுகல நீலகிரி சேயவில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட புத்த பெருமானின் புனித நினைவுச்சின்னங்கள் பிரதிர்ஷ்டை செய்யும் நிகழ்வு 2023.05.07 அன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், ஹகுரன்கெத்த, மாதன்வல ரஜமஹா விஹாராபதி வெரல்லகம சுமங்கல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். பி. திசாநாயக்க, சி. பி. ரத்நாயக்க, யதாமினி குணவர்தன, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகே உட்பட பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.